காஞ்சிபுரம் வந்தவாசி சாலையின் நடுவில் உள்ள உக்கலில் (மடாவளம்) எழுந்தருளி அருள் பாவித்து வரும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் சந்திரனைத் தலையில்( மூன்றாம் பிறைச்சந்திரன்) சூடிய சந்திர மௌலீஸ்வரர் சன்னதியும், ஸ்ரீ ஜெகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் சன்னதியும், தொழில் வளர்ச்சிக்கு அருள் வழங்கும் பைரவர் சன்னதியும், உடல்நலனைப் பேணிக்காக்கும் தன்வந்திரி சன்னதியும், அருள்மிகு கணபதி, முருகர், சன்னதியும் அமைந்துள்ளது.
72 அடிகொண்ட கிழக்கு ராஜ கோபுரம், 73 அடிகொண்ட வடக்கு ராஜகோபுரம் அமையப்பெற்று உள்ளே பிரகாரம், வெளிப்பிரகாரம் நடுவில் மண்டபம் அமையப் பெற்றது மிகப் பெரிய சிறப்பாகும், வெளியே கருங்கற்களால் கட்டப்பட்ட மதில் சுவரும் அமையப் பெற்று ஆலயம் அழகாகக் காட்சித் தருகின்றது. கோபுரங்கள் மேல் தெரியும் வண்ண விளக்குகளின் அற்புதக் காட்சிக் கண்ணைப் பறிப்பதாகும், காண்பவரைக் கவர்வதாகும்.
In the village called Ukkal (Madavalam) situated on the road to Kanchipuram, within the Sri Kamatchi Amman temple, the Chandramouleeswarar shrine adorned with the moon on his head (third lunar crescent), along with the shrines of Sri Jekathguru Sri Adi Shankarar, Lord Bhairavar who bestows grace for business prosperity, Tanvarti who ensures physical well-being, the merciful Lord Ganesha, Muruga, and their respective shrines are all housed.
The temple boasts of a grand eastern Rajagopuram (tower) standing 72 feet tall, a northern Rajagopuram standing 73 feet tall, and a spacious hall in the middle with pillars adorned with beautiful carvings inside and outside, presenting a magnificent sight. The towers are decorated with vibrant colors and stunning illuminations, captivating the eyes of those who behold them.
பிரதம குரு
எழுதப் படிக்கத் தெரியாத ஒரு விவசாயின் மகன் அரிசி பயிரை வளர்க்கலாம். ஆனால் ஆன்மீகப் பயிரை வளர்ப்பது மிகப்பெரிய அதிசயம்! ஆனால் உண்மை! காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள உக்கலில் (மடாவளம்) எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்பாள் திருக்கோயிலில் இந்த அதிசயம் நாள் தோறும் நடந்து கொண்டிருக்கிறது. அன்னை ஸ்ரீகாமாட்சியின் அருளும்,ஜெகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரரின் ஆசியும் தன்னுள்ளே அமையப்பெற்ற ஸ்ரீ.ம.சங்கர் குருஜீ அவர்கள் யாக வேள்வி நடத்தும் நேரம் சமஸ்கிருத மொழியில் வேதம் சொல்லும் வேகம் வியப்பைத் தருகிறது. பக்தர்களின் விழி உயர்த்திப் பார்க்க வைக்கிறது. மெய்சிலிர்க்க வைக்கிறது. செய்யும் வேள்வித்தீயில் அன்னையின் உருவமும் ஆதிசங்கரின் உருவமும் தோன்றிக்காட்சியளிப்பது வியப்பிலும் வியப்பாகும்; பிறவிப்பயனாகும்.
Prime Guru
An illiterate farmer's son can cultivate rice. But growing a spiritual crop is a great miracle! But true! This miracle is happening every day at the Sri kamakshi Ambal temple at Ukkal (Madavalam) on the road from Kanchipuram to Vandavasi. Blessed with the grace of Mother Sri Kamakshi and the blessings of Jagadguru Sri Adi Shankaracharya,Sri. M. Sankar Guruji recites the Vedas in Sanskrit with an astonishing speed during the Yaga rituals. Makes the eyes of the devotees look up. Mesmerizing. In the sacrificial fire he conducts, the forms of the Mother and Adi Shankaracharya appear and reveal themselves, which is a wonder beyond words; is congenital.
அறங்காவலர்
உக்கலில் (மடாவளம்) அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நாள்தோறும் அன்பும், அருளும், அமைதியும், வளர்கிறது என்றால், அறம் அரசாளுகிறது என்று பொருள். இதுதானே பக்தர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும். நல் அறம் வரை தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் செ. திருவாளர் S.பிரபு அவர்கள் என்றால் அதுமிகையல்ல. ஆலயத்தில் செய்யப்படும் நற்பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில், குறித்த நேரத்தில் நடைபெற்று நிறைவு பெறுகிறது என்றால் இவரின் நிர்வாகத்திறமையே காரணமாகும். தானத்தில் சிறந்தது அன்னதானம் - 'உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" இந்த வரிகளுக்கு ஏற்ப, நாளும் ஆலயத்தில் அன்னதானம் வழங்குவது, சமூகச் சேவையின் உச்சமாகும். இதற்கெல்லாம் காரணம் செ. திரு. S. பிரபு. அறங்காவலர் அவர்கள் தான் என்பது பக்தர்கள் காணுகின்ற உண்மை!
Trustee
If love, grace and peace grow day by day in the auspicious Sri Kamakshi Ambal temple in Ukkal (Madavalam), it means virtue reigns. This is what gives joy to the devotees. Mr. S. Prabhu, who has completely dedicated himself to noble deeds, is a shining example of this. If all the good works done in the temple are done in an excellent manner and completed on time, it is because of his management skills. The best of donations is almsgiving - 'Those who give alms give life' According to these lines, daily almsgiving at the temple is the pinnacle of social service. All credit for this goes to Mr. S. Prabhu, the vigilant protector, as the devotees witness the truth! Giving food daily at the temple elevates it to the pinnacle of social service.
அறங்காவலர்
உக்கலில் (மடாவளம்) அமைந்துள்ள அருள்மிகு. ஸ்ரீ. காமாட்சி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் கூடிக்கொண்டே இருக்கிறது என்றால், அம்பாளைத் தரிசனம் செய்பவர்கள் அமைதியான நல்வாழ்வும், வளமும் பெறுகிறார்கள் என்பதே காரணம் . இந்த ஆலயத்தின் அறங்காவலராக உள்ள திருமதி.P.லட்சுமி அவர்களின் அன்பான முறையே காரணம். திரு.பிரபு அவர்களின் இல்லத்தரசியாக இருந்தாலும், ஆலயத்தின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்பணித்து வாழ்கின்றார். ஆலயத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பிள்ளைகளின் நடன நிகழ்ச்சிகள் எதுவாயினும் இவரே முன்னிருந்து கவனித்து சிறப்பாக நடைபெற வழிசெய்கின்றார். இவரால் இந்தத் திருக்கோயில் நாளும் புதுப்பொலிவு பெறுகிறது என்றால் மிகையல்ல.
Trustee
In the Ukkal (Madavalam), at the temple of Arulmigu Sri Kamakshi Amman, the crowd of devotees is increasing day by day because those who have the darshan of the Goddess are blessed with a peaceful and prosperous life. The loving approach of Mrs. P. Lakshmi, who is the guardian of this temple, is the reason for this. Although she is the wife of Mr. Prabhu, she has completely dedicated herself to the development of the temple. Whether it is art performances, music events, or children's dance performances held in the temple, she takes the lead in organizing and ensuring their success. It is not an exaggeration to say that due to her efforts, this sacred temple is receiving a renewed glory every day.
அறக்கட்டளை உறுப்பினர்
Trust Member
அறக்கட்டளை உறுப்பினர்
Trust Member
அறக்கட்டளை உறுப்பினர்
Trust Member
அறக்கட்டளை உறுப்பினர்
Trust Member
அறக்கட்டளை ஊழியர்
Trust Staff
அறக்கட்டளை ஊழியர்
Trust Staff
அறக்கட்டளை ஊழியர்
Trust Staff
அறக்கட்டளை ஊழியர்
Trust Staff
தொண்டு உறுப்பினர்
Charity Member
தொண்டு உறுப்பினர்
Charity Member
தொண்டு உறுப்பினர்
Charity Member
ஸ்ரீ காமாட்சியம்மாள் இந்த ஆலயத்தில் அமர்ந்து அருளாட்சி செய்து பக்தர்களைப் பரவச மூட்டுகிறாள். அன்னையின் திருமுகப் பொலிவு கண் கொள்ளாக்காட்சியாகும். அன்னையின் திருநெற்றியிலே மாதந் தோறும் வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவுக்காட்சித் தோன்றுவது அதி அற்புதம்! பேரழகு, உலக அதிசயம்!
Sri Kamakshi Amman is seated in this temple, graciously ruling and captivating the devotees. The divine radiance of the Mother's face is a sight to behold. It is a great wonder that the sacred crescent moon on the Mother’s forehead appears like the crescent moon seen in the sky each month! This unparalleled beauty is a marvel of the world!
'பித்தா பிறை சூடிபெருமானே!' என்று சிவபெருமானைச் சுந்தரர் சுந்தரத் தமிழிலே பாடியுள்ளார், அந்தப் பிறைச்சந்திரனை (மூன்றாம் பிறையைச் ) சிவபெருமான் தலையிலே சூடிய காரணத்தால் சந்திரமௌலீஸ்வரர் ஆனார். அவர் இந்தத் திருக் கோயிலில் அமர்ந்து பக்தர்களுக்கு நாள்தோறும் அருள் வழங்கிக் கொண்டிருப்பது மிகப்பெரிய சிறப்பாகும்.
"Sundarar has sung in beautiful Tamil, 'Pithaa Pirai Oodiperumaale!' referring to Lord Shiva wearing the crescent moon (the third day moon) on His head, hence He is known as Chandramouleeswarar. It is a great honor that He is seated in this sacred temple, bestowing His grace upon the devotees every day."
மலையாளதேசமான கேரளாவில் காலடிப் பேட்டையில் அவதாரம் செய்தவர். உலகத்தில் ஆன்மிகப் பயிரை வளர்த்தவர். அன்பு, அமைதியை உருவாக்கிய பெரியமகான். அதனால் தானே ஜெகத்குருவானார். அவரின் திருவுருவம் இந்தத் திருக்கோயிலில் இருப்பது மிகப் பெரிய புண்ணியமாகும்.
He was born in Kaladi in the state of Kerala, a great saint who cultivated spirituality in the world and created love and peace. That is why he is the Jagadguru. It is a great blessing that his divine form is present in this sacred temple.
வாழ்வில் மிகப்பெரிய வளமும், அறிவும், ஞானமும் பெற ஞானகணபதியின் அருள் நமக்கு வேண்டும். அந்த அறிவு, ஞானம், அழகு, வீரம், வளம் அனைத்தையும் வாரி வழங்கும் ஸ்ரீயோக கணபதியும் இந்தத் திருக் கோயிலில் இருப்பது மிகப் பெரிய சிறப்பாகும்.
To attain great prosperity, knowledge, and wisdom in life, we need the grace of Jnana Ganapathi. It is a great honor that Sri Yoga Ganapathi, who bestows knowledge, wisdom, beauty, valor, and prosperity in abundance, is present in this sacred temple.
"சுக்குக்கு மிஞ்சிய கஷாயம் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை" இது பக்தர்கள் சொல்லும் பழமொழி. இந்த ஆலயத்தின் உள்ளே சுப்பிரமணியரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கிவருவது மிகப்பெரிய பேறாகும்! உலகை நொடியில் வலம் வந்தார். அவரை நாம் பக்தியுடன் வலம் வந்தால் நம் வாழ்வில் வளம் வரும் என்பது பக்தர்கள் கண்ட உண்மையாகும்.
"Sukkukku minjiya kashayam illai" - for Subramaniyar, Ruki There is no God. This is a proverb spoken by devotees. Inside this temple, Subramaniyar also shows mercy to devotees and offers blessings. Bringing strength to the world in minutes. If we come with devotion, strength will come in our lives.
இந்த ஆலயத்தின் உள்ளே ஸ்ரீ மகாலட்சுமித்தாயும் அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டிய செல்வ வளங்களை நாள் தோறும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். பொருள் (செல்வம்) இல்லாதவனை இந்த உலகம் மதிக்கப் பொருள் வேண்டும். இந்த ஆலையத்திற்கு வந்தவர்கள் பொருளோடு அருளும் பெற்று வளமாக வாழ்கிறார்கள்.
Inside this temple, Sri Mahalakshmi stands and daily showers devotees with the wealth and blessings they seek. Those who come to this temple desire wealth (prosperity) and this world admires those who do not have it.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"- அந்த வாழ்வே சிறந்த வாழ்வாகும். இங்கே மருத்துவராக அமர்ந்து பக்தர்களின் எந்த நோய்க்கும் மருந்து தந்து நல்ல ஆரோக்கியமான வாழ்வை தருகின்றார். அந்தத் தன்வந்திரி சன்னதியும் இங்கே அமைந்திருப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.
"Living without illness is the greatest wealth" - such a life is considered the best. Here, as a doctor, he resides and provides medicine for any illness of the devotees, ensuring a healthy life. The presence of such a sacred place here is considered a great blessing.
தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீபைரவரை வணங்கி வழிபட்டால் தொழில் வளம் மேலும் மேலும் பெருகும் என்பது பக்தர்களின் மிகப் பெரிய நம்பிக்கை . அந்த வளத்தையும் வழங்க இந்த ஆலயத்தில் ஸ்ரீ பைரவர் அமர்ந்திருப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.
In the eighth phase of the moon - if one worships and follows Lord Shiva, prosperity in business will increasingly flourish," this is the greatest faith of devotees. Offering this prosperity, Lord Bhairava residing in this temple is considered a great blessing.
இந்த ஆலயத்தின் அறக்கட்டளை 2008-ஆம் ஆண்டு தொடங்கி ஆலயத்தைக் கட்டியது அப்போதே தங்கும் அறைகளையும் சேர்த்தே கட்டியது. ஆரம்பத்தில் 40 அடியாக இருந்து, இன்று மிகப் பெரியதாக வளர்ந்துள்ளது. அடுத்து, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வேதபாடசாலை இன்னும் தேவையான சமுதயப்பணிகளைச் செய்யவும் திட்டமிருக்கின்றது.
The temple's trust was established in 2008, and the temple was constructed at that time, including accommodations. Initially, it was 40 feet in size, and today it has grown significantly larger. Next, there are plans to build a school, college, hospital, Vedic school, and undertake other necessary community services.
காஞ்சிபுரத்தில் இருந்து
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் எந்தப் பேருந்திலும் ஏறி, கூழமந்தல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து மடாவலம் காமாட்சி அம்பாள் கோயிலுக்குச் செல்லுங்கள். ஆட்டோ பயணத்தின் தூரம் 1.5 கிமீ மட்டுமே.
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை. சென்னையில் இருந்து டாக்ஸியில் முன்பதிவு செய்து கோயிலை அடையலாம். சென்னையில் இருந்து கோயிலுக்கு 75 கிமீ தூரம் மட்டுமே உள்ளது.
From Kanchipuram
Board in any bus going to Vandavasi from Kanchipuram and get down at Koozhamandal bus stop. From there take one Auto and ask for Madaavalam Kamakshi Ambal Temple. Distance in Auto travel is only 1.5 Kms.
The nearest Airport is Chennai. From Chennai you can book a Taxi and reach temple. The distance from Chennai to Temple is only 75 Kms.